போதைப்பொருள் வழக்கில் ரவுடிக்கு ஜாமீன் மறுப்பு -ஐகோர்ட்டு உத்தரவு

போதைப்பொருள் வழக்கில் ரவுடிக்கு ஜாமீன் மறுப்பு ஐகோர்ட்டு உத்தரவு.

Update: 2022-08-17 19:07 GMT

சென்னை,

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ரவுடி, வினோத் என்கிற தொத்து வினோத். கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் ஆயிரத்து 125 போதை மாத்திரைகள் வைத்திருந்ததாக இவர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீஸ் பிடியில் இருந்து வினோத் தப்பிவிட்டார். பின்னர் கடந்த பிப்ரவரி 7-ந் தேதி போலீசில் சரணடைந்தார். இந்த வழக்கில் கைதானவர்கள் ஜாமீனில் வெளியில் வந்துவிட்டனர். எனவே தனக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டில் வினோத் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் தாமோதரன், மனுதாரர் வினோத் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட்டார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 'மனுதாரருக்கு ஜாமீன் வழங்க முடியாது. அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறேன். அதேநேரம், இந்த போதைப்பொருள் கடத்தல் வழக்கின் குற்றப்பத்திரிகையை போலீசார் ஏற்கனவே சென்னை மாவட்ட முதலாவது செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்துவிட்டனர். எனவே இந்த வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்