மருத்துவ காப்பீட்டு நிறுவனம்:வாடிக்கையாளருக்கு ரூ.2½ லட்சம் வழங்க வேண்டும்நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

Update:2023-05-31 00:25 IST

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் வேணு அரவிந்த் (வயது33). இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கிணற்றில் நீச்சல் அடித்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக அவருக்கு வலது தோள்பட்டையில் அடிபட்டு உள்ளது. இதற்கு அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து உள்ளார்.

அவர் தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தில் பிரீமியம் செலுத்தி, சந்தாதாரராக இருந்து வந்ததால் மருத்துவ செலவு வகைகளை காப்பீட்டு நிறுவனத்திடம் கேட்டபோது, அந்த பணத்தை வழங்க அந்த நிறுவனம் மறுத்துவிட்டது. இதனால் அவர் கடந்த 2019-ம் ஆண்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ஆணைய உறுப்பினர் ரத்தினசாமி முன்னிலையில் நீதிபதி டாக்டர் ராமராஜ் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ செலவு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 320-ஐ 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 9 சதவீத வட்டியுடன் காப்பீட்டு நிறுவனம் 4 வார காலத்துக்குள் வழங்க வேண்டும். மேலும் அவருக்கு சேவை குறைபாடு காரணமாக ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்