அரசுப்பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் செலுத்தும்படி போதைப்பொருள் கடத்தியவருக்கு ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன்

அரசுப்பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் செலுத்தும்படி போதைப்பொருள் கடத்தியவருக்கு ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது

Update: 2023-02-15 19:56 GMT


திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அப்பாஸ் என்பவர் ரூ.5 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான 871 கிலோ போதைப்பொருள் கடத்தியதாக பதிவான வழக்கில் கைதானார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர் சிவகங்கை மாவட்டம் சண்முகநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்து, அவருக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்