கோர்ட்டு ஊழியர் மயங்கி விழுந்து சாவு

புதுப்பேட்டை அருகே கோர்ட்டு ஊழியர் மயங்கி விழுந்து சாவு

Update: 2023-06-22 18:45 GMT

புதுப்பேட்டை

விழுப்புரம் மாவட்டம், நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 64). ஓய்வுபெற்ற கோர்ட்டு ஊழியரான இவர் நேற்று முன்தினம் காலை தனது மொபட்டில் கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை அருகே உள்ள பைத்தாம்பாடி சத்திரம் பகுதியில் உள்ள உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். வீட்டின் அருகில் வந்தபோது ராமச்சந்திரனுக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது உறவினர் வள்ளி கொடுத்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்