போதை பொருட்களை கடத்தி வந்த தம்பதி கைது

குடியாத்தம் அருகே போதை பொருட்களை கடத்தி வந்த தம்பதி கைது ெசய்யப்பட்டனர்.

Update: 2023-06-20 16:57 GMT

குடியாத்தம்

குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், தாரணி உள்ளிட்ட போலீசார் இன்று அதிகாலை குடியாத்தம் நேதாஜிசவுக் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்ட போது கணவன்-மனைவி இருந்தனர். அவர்கள் வைத்திருந்த மூட்டையை சோதனை செய்த போது அதில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது.

தொடர்ந்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குடியாத்தம் தரணம்பேட்டை ஷெரிப் நகரை சேர்ந்தவர் அப்ரோஸ் (வயது 35), அவருடைய மனைவி ரஷிதா (30) என்பதும், இருவரும் தற்போது பெங்களூருவும் வசித்து வருவதும் தெரிய வந்தது.

அங்கு அப்ரோஸ் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

குடியாத்தத்திற்கு சொந்தக்காரில் அப்ரோஸ், ரஷிதாவும் வந்துள்ளனர் வரும்போது ஒரு மூட்டை குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பெங்களூருவில் இருந்து வாங்கி குடியாத்தத்தில் விற்க கொண்டு வந்தனர்.

உள்ளி கூட்ரோடு அருகே கார் பழுதாகி நின்று விட்டது. இதனையடுத்து இருவரும் அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறி குடியாத்தத்திற்கு வரும்போது பிடிபட்டது தெரியவந்தது.

மேலும் கடந்த 2 ஆண்டுகளாக குடியாத்தத்திற்கு வரும்போதெல்லாம் குட்கா உள்ளிட்ட பொருட்களை கொண்டுவந்து உறவினர் மூலம் விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ஒரு மூட்டை போதை பொருட்களையும், காரையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்