நிலப்பிரச்சினையில் ஒருவரை தாக்கியதாக தம்பதி கைது
நிலப்பிரச்சினையில் ஒருவரை தாக்கியதாக தம்பதி கைது செய்யப்பட்டார்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூரை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 55). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சரவணன்(36) என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக நிலப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நிலப்பிரச்சினை தொடர்பாக சரவணனும், அவரது மனைவி சரண்யாவும்(31) சேர்ந்து தேவராஜை தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த தேவராஜ் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்த அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன், சரண்யா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.