நாட்டு வெடிக்கடை உரிமையாளருக்கு 1 ஆண்டு சிறை

வெடி விபத்தில் காவலாளி உயிரிழந்த வழக்கில் நாட்டு வெடிக்கடை உரிமையாளருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2023-02-21 18:45 GMT

வெடி விபத்தில் காவலாளி உயிரிழந்த வழக்கில் நாட்டு வெடிக்கடை உரிமையாளருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

நாட்டு வெடிக்கடை

நாகை வாணக்காரத் தெருவை சேர்ந்த வீரப்பன் மனைவி சவுந்தரவள்ளி (வயது 60). இவர் வடக்குடியில் நாட்டு வெடிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்த கடையில் இரவு காவலாளியாக பாப்பாப்கோவிலை சேர்ந்த நாகம்மாள் (55) என்பவர் பணியாற்றி வந்தார்.கடந்த 14.11.2017 அன்று அதிகாலை நாட்டு வெடிக்கடையில் பயங்கர சத்தத்துடன் வெடிகள் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது.

காவலாளி சாவு

அப்போது வெடிக்கடையில் தூங்கிக் கொண்டிருந்த நாகம்மாள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார்.

மேலும் வெடி விபத்து நடந்த இடத்தை சுற்றியுள்ள வீடுகளின் கண்ணாடிகள் உடைந்ததில் சிலர் படுகாயம் அடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாட்டுவெடி கடையின் உரிமையாளர் சவுந்தரவள்ளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு நாகை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

1 ஆண்டு சிறை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகா நேற்று தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பில் பாதுகாப்பு இன்றி, அஜாக்கிரதையாக நாட்டு வெடிக்கடை நடத்தி, விதிகளை மீறி நாகம்மாளை இரவு பணியில் ஈடுபடுத்தியதால் வெடி விபத்தில் அவர் உயிரிழந்த குற்றத்திற்காக, உரிமையாளர் சவுந்தரவள்ளிக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்