கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வீச்சு? மாணவர்களுக்கு இடையே மோதல்- சென்னையில் அதிர்ச்சி
சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரிக்குள் நாட்டு வெடி குண்டு வீசப்பட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
சென்னை,
சென்னை கிண்டி - வேளச்சேரி சாலையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் இருவேறு வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்குள் மோதல் நிலவி வந்துள்ளது. இந்த நிலையில், மாணவர்களுக்குள் இன்று மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது மாணவர்களில் ஒரு தரப்பினர் நாட்டு வெடி குண்டு வீசியதாக கூறப்படுகிறது.
பலத்த சத்தத்துடன் வெடித்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். வீசியது நாட்டு வெடிகுண்டா அல்லது தீபாவளி பட்டாசா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.