மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு

திண்டிவனம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் தொடங்குகிறது

Update: 2023-05-28 18:45 GMT

திண்டிவனம்

திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு அனைத்து இளங்கலை, இளம் அறிவியல் பாடங்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீடான முன்னள் ராணுவத்தினரின் வாரிசு, மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவர் படை, விளையாட்டு பிரிவு மற்றும் அந்தமான் நிக்கோபார் மாணவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நாளை மறுநாள்(புதன்கிழமை) காலை 9 மணி முதல் நடைபெறுகிறது. தொடா்ந்து பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல், கணினிஅறிவியல், தாவரவியல், புவி அமைப்பியல் மற்றும் புள்ளியியல் ஆகிய பாட பிரிவுகளுக்கு வருகிற 1-ந் தேதியும்(வியாழக்கிழமை), பி.காம்., பி.பி.ஏ. ஆகிய பாட பிரிவுகளுக்கு 2-ந் தேதியும்(வெள்ளிக்கிழமை), பி.ஏ. தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடபிரிவுகளுக்கு 3-ந் தேதியும், பி.ஏ. வரலாறு பாடத்துக்கு 5-ந் தேதியும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

முதல் கட்ட கலந்தாய்வுக்கு பிறகு காலியாக உள்ள இடங்களுக்கு 2-வது கட்ட கலந்தாய்வு அனைத்து அறிவியல் பாட பிரிவுகளுக்கு வருகிற 6-ந் தேதியும்(செவ்வாய்கிழமை), பி.காம்., பி.பி.ஏ. ஆகிய பாட பிரிவுகளுக்கு 7-ந் தேதியும், பி.ஏ. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 8-ந் தேதியும், பி.ஏ. வரலாறு பாட பிாிவுக்கு 9-ந் தேதியும் கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் பட்டியலை கல்லூரி இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். கலந்தாய்வுக்கு வரும் மாணவ, மாணவிகள் உரிய ஆவணங்களுடன் குறித்தநேரத்தில் கலந்துகொள்ள வேண்டும்.

மேற்கண்ட தகவலை திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி முதல்வா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்