நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

சங்கரன்கோவில் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்

Update: 2022-10-14 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம் நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. ஆணையர் ரவிச்சந்திரன், மேலாளர் மாரியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 24 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் காங்கிரஸ் கவுன்சிலர் உமாசங்கர், அஜெண்டா தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி வெளிநடப்பு செய்தார். இதைத்தொடர்ந்து வார்டுகளில் எந்த வேலையுமே நடைபெறவில்லை என குறிப்பிட்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சந்திரசேகர் தீர்மான நகலை கிழித்து எறிந்து விட்டு வெளிநடப்பு செய்தார்.

ம.தி.மு.க. கவுன்சிலர்கள் கோமதி, ராஜேஸ்வரி ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர். அப்போது தங்களுடைய கோரிக்கைகளை மனுவாக நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரியிடம் கொடுத்துவிட்டு சென்றனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து 20 கவுன்சிலர்களுடன் கூட்டம் சுமார் 1 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது.


Tags:    

மேலும் செய்திகள்