பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

சேரன்மாதேவி பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.;

Update: 2023-07-31 19:02 GMT

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி பேரூராட்சியில் நேற்று சாதாரண கூட்டம் நடைபெற்றது. இதில் சேரன்மாதேவி தென்பகுதிக்கு தினசரி குடிநீர் வழங்காததை கண்டித்தும், குடிநீர் குழாய் உடைப்பை கண்டித்தும், குப்பைகள் சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரியும் கவுன்சிலர்கள் கேள்விகளை எழுப்பினர். இதற்கு முறையான பதில் அளிக்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து, கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதில் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட 14 கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்