தீர்மானம் நிறைவேற்றாததால் நெல்லியாளம் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
தீர்மானம் நிறைவேற்றாததால் நெல்லியாளம் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
பந்தலூர்
பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் அவசர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் சிவகாமி தலைமை தாங்கினார். துணை தலைவர் நாகராஜ், மேலாளர் சக்திவேல், பொறியாளர் வசந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஊட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு சென்றுவிட்டார். இதனால் கூட்டத்தில் வளர்ச்சிதிட்டம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை கண்டித்து கவுன்சிலர்கள் சேகர், ரமேஸ் ,முரளிதரன், புவனேஸ்வரன், ஆலன், சாந்தி, விஜயா, ஜாபீர் உள்ளிட்ட 19 கவுன்சிலர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.