தலைவரின் தீர்மானத்தை கண்டித்து கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பாலூர் ஊராட்சி கூட்டத்தில் தலைவரின் தீர்மானத்தை கண்டித்து கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Update: 2023-06-23 18:45 GMT

கருங்கல், 

கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலூர் ஊராட்சியில் நேற்று ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் நியமனம் குறித்து மாவட்ட கலெக்டர் அனுமதி கேட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு 9 உறுப்பினர்களில் 4 பேர் ஆதரவாகவும், 3 பேர் எதிராகவும், 2 பேர் வராத நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி ஊராட்சி துணைத்தலைவர் சுரேஷ் பாபு, 7-வது வார்டு கவுன்சிலர் மரிய பிலோமினாள், 9-வது வார்டு கவுன்சிலர் செல்லம் ஆகியோர் திடீரென அலுவலகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, துணைத்தலைவர் சுரேஷ்பாபு கூறுகையில், பாலூர் ஊராட்சியில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடத்துக்கு விதவைப்பெண் ஒருவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் பூட்டேற்றி ஆலுவிளை பகுதியைச் சேர்ந்த அபிராம் என்பவரை நியமனம் செய்ய மாவட்ட கலெக்டரை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார். இதுபற்றி தகவல் அறிந்த கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய வட்ட வளர்ச்சி அலுவலர் ராஜகுமார் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்