நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதம்

சுரண்டை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-30 19:00 GMT

சுரண்டை:

சுரண்டை நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் ப.வள்ளிமுருகன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சங்கராதேவி முருகேசன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் சுகந்தி (பொறுப்பு) தீர்மானம் குறித்து விளக்கி கூறி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் நகராட்சி தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள மாதாந்திர ஊதியத்திற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், கவுன்சிலருமான ஜெயபாலன் முன்மொழிந்தார். தொடர்ந்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் பெரும்பாலான கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பகுதியில் குடிநீர் வினியோகம் சீராக வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். புதிய தெருகளுக்கான சாலைவசதி மற்றும் கட்டிட அனுமதி வெகு நாட்களாக வழங்கப்படாமல் உள்ளது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். நகராட்சிக்கு நிரந்தர ஆணையாளர், பொறியாளர், நகரமைப்பு அலுவலர் ஆகியோர் நியமிக்கப்படாமல் பொறுப்பு அதிகாரிகள் செயல்படுவதால் பணிகள் சரிவர நடக்கவில்லை எனக் கூறி கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதுடன், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்