கூடங்குளம் அருகே நாட்டு வெடிகுண்டு பதுக்கலா?; கடலோர பகுதிகளில் போலீசார் சோதனை

கூடங்குளம் அருகே கூத்தங்குழியில் நாட்டு வெடிகுண்டு பதுக்கப்பட்டு உள்ளதா? என கடலோர பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

Update: 2023-05-15 20:13 GMT

கூடங்குளம்:

கூடங்குளம் அருகே கூத்தங்குழியில் நாட்டு வெடிகுண்டு பதுக்கப்பட்டு உள்ளதா? என கடலோர பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கலா?

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை அடுத்த கூத்தங்குழி மீனவ கிராமத்தில் கிறிஸ்தவ ஆலய திருவிழா நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அந்த கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. இதுதொடர்பாக அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த நாட்டு வெடிகுண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்து இருந்தனர்.

இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, கூத்தங்குழியில் நேற்று கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ தலைமையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

அதிரடி சோதனை

அங்கு கடற்கரையில் நாட்டு வெடிகுண்டுகளை எங்கேனும் புதைத்து வைத்துள்ளனரா? என்பதை கண்டறிவதற்காக மோப்ப நாய் மூலமும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கூத்தங்குழி, பாத்திமாநகர், சுண்டங்காடு உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கும் மோப்பநாயுடன் சென்று போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

எனினும் நீண்ட நேரமாக தேடியும், நாட்டு வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கடற்கரை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்வதுடன் அவ்வப்போது திடீர் சோதனை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்