காவேரிப்பட்டணம் வாரச்சந்தையில்பொதுமக்களுக்கு மஞ்சப்பை விழிப்புணர்வு

Update: 2023-07-24 19:45 GMT

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம் பேரூராட்சி அலுவலகம் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தேசிய பசுமை படை ஆகியவை சார்பில் வாரச்சந்தையில் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் தலைமை தாங்கினார். நகர தி.மு.க. பிரமுகர் செந்தில்குமார், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் பவுன்ராஜ், வாசவி, பேரூராட்சி செயல் அலுவலர் சேம் கிங்ஸ்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் தலைமையில் அலுவலர்கள், களப்பணியாளர்கள், கவுன்சிலர்கள் வாரச்சந்தையில் ஒவ்வொரு கடைக்கும் நேரில் சென்று பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து கடைக்காரர்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், வாரச்சந்தைக்கு பொருட்களை வாங்குவதற்கு வருகை தந்த பொதுமக்களுக்கும் பிளாஸ்டிக் பைகளின் தீமைகளை எடுத்துக் கூறி 1,500 மஞ்சப்பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சேகர், கீதாஞானசேகர், தமிழ்செல்வி சோபன்பாபு, அமுதா பழனி, கோகுல்ராஜ், நித்திய குமரன், பேரூராட்சி அலுவலர்கள் இளங்கோ, சுரேஷ் மற்றும் ரவி, சபரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்