ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம்

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

Update: 2023-07-18 18:45 GMT

பொறையாறு:

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

பருத்தி ஏலம்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் விளைபொருட்கள் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின்படி இ-நாம் மூலம் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. தற்போது செம்பனார்கோவில் பகுதியில் விவசாயிகள் பருத்தி அறுவடை செய்து வருகின்றனர்.

இதையடுத்து நாகை விற்பனை குழு மூலம் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் கீழ் இ-நாம் முறையில் கண்காணிப்பாளர் சங்கர்ராஜா தலைமையில் செம்பனார்கோவில் ஓழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

ரூ.2 கோடிக்கு ஏலம்

இந்த பருத்தி ஏலத்தில் குவிண்டால் ஒன்று அதிகபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 669-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.6ஆயிரத்து 145-க்கும் சராசரி விலையாக ரூ.6 ஆயிரத்து 375-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக சுமார் 3ஆயிரத்து 500 குவிண்டால் பருத்தி ரூ.2 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஏலத்தில் 746 விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை, தேனி, கோவை, கொங்கணாபுரம், பெரம்பலூர், விழுப்புரம், திருப்பூர், கும்பகோணம் மற்றும் ஆந்திரா, குஜராத் ,மகாராஷ்ட்ராஉள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 16 வியாபாரிகள் மற்றும் மில் அதிபர்கள் கொள்முதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்