ரூ.9 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

திருச்செங்கோட்டில் ரூ.9 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

Update: 2022-09-27 19:53 GMT

எலச்சிபாளையம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. பருத்தி பி.டி. ரகம் குவிண்டாலுக்கு ரூ.8 ஆயிரத்து 99 முதல் ரூ.8 ஆயிரத்து 925 வரையிலும், சுரபி பருத்தி ரகம் குவிண்டாலுக்கு ரூ.8 ஆயிரத்து 299 முதல் ரூ.9 ஆயிரம் வரையிலும் ஏலம் போனது. மொத்தம் 407 பருத்தி மூட்டைகள் ரூ.9 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்