பூலாம்பட்டியில் ரூ.30 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
பூலாம்பட்டியில் ரூ.30 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
எடப்பாடி:
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டியில் திருச்செங்கோட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தின் சார்பில் பருத்தி ஏலம் நடந்தது. 800 பருத்தி மூட்டைகள் 250 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு கூட்டுறவு துறை அலுவலர்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது. இதில் பி.டி ரக பருத்தி குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 999 முதல் ரூ.10 ஆயிரத்து 115 வரை விற்பனையானது. மொத்தம் 800 மூட்டை பருத்தி ரூ.30 லட்சத்துக்கு ஏலம் போனது.