திசையன்விளை:
மேலதிருச்செந்தூரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 52). இவர் திசையன்விளை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். மதுவுக்கு அடிமையான அவர் மது அருந்திவிட்டு அடிக்கடி வேலைக்கு செல்லாமல் இருந்தார் என கூறப்படுகிறது. நேற்று மாலை இவர் திசையன்விளை - நவ்வலடி சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரில் உள்ள ஓடையில் பிணமாக கிடந்தார். அவர் அருகில் 2 மதுபாட்டில்கள் கிடந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் மதுபோதையில் இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.