நெல்லை சந்திப்பு பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

நெல்லை சந்திப்பு பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-06-09 20:56 GMT

நெல்லை மாநகர பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. நெல்லை சந்திப்பு பகுதியில் புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பஸ் நிலையத்தை சுற்றி மோட்டார் சைக்கிள்கள், வேன், கார் மற்றும் ரெட் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. மாநகர பகுதியை சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் அந்த வழியாக செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் அந்த சமயத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்வது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் நெல்லை சந்திப்பு பகுதியில் நேற்று மதியம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தச்சநல்லூர், ராமையன்பட்டி போன்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் சந்திப்பு பஸ் நிலையம் வழியாக செல்ல ஏதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக அங்குள்ள இரும்பு தடுப்புகளை அகற்ற அறிவுறுத்தியதாக தெரிகிறது. இந்த ஆய்வின்போது துணை போலீஸ் கமிஷனர் அனிதா மற்றும் போக்குவரத்து போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர். தொடர்ந்து அவர்கள் பஸ் நிலைய பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்