கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

கலவை தாலுகாவில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2022-06-12 12:23 GMT

கலவை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகாவில் உள்ள கிராமங்களில் கொரேனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. கலவை தாசில்தார் ஷமீம் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலவை, கணியனூர், அகரம் போன்ற பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

துணை தாசில்தார்கள் சத்யா, இளையராஜா, வருவாய் ஆய்வாளர் வீரராகவன், கிராம நிர்வாக அதிகாரிகள் ஸ்ரீதர், சுகுமார், ராணி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்