கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் ஆய்வு

திமிரியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2022-06-12 13:44 GMT

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் திமிரி பேரூராட்சி பஸ் நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் முகாமில் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதனை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆற்காடு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத் துறையை சேர்ந்தவர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்