சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்-நாளை நடக்கிறது

சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.

Update: 2022-07-08 22:17 GMT

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதனால் ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும், 2-வது தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தாதோர் விவரம் சேகரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

இந்தநிலையில், தமிழகம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே நடந்த அனைத்து இடங்களிலும் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் இந்த சிறப்பு முகாமிற்கு வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்