600 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் இன்று 600 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-17 18:45 GMT
சிவகங்கை மாவட்டத்தில் இன்று 600 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:-

தடுப்பூசி முகாம்

சிவகங்கை மாவட்டத்திலுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 37-வது கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாம்கள் மாவட்டத்தில் 600 இடங்களில் நடைபெறுகிறது.

கொரோனா தடுப்பூசிகள் மற்றும் 18 வயது முதல் 53 வயது வரை உள்ள அனைவருக்கும் முன்னெச்சரிக்கை தடுப்பூசிகள் ஆகியவைகளை வழங்கிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

முன்னெச்சரிக்கை

இரண்டு தவணைகள் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டு, 6 மாத காலம் நிறைவு பெற்ற அனைவரும் இன்றையதினம் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக்கொண்டு, முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

பொதுமக்களை பாதுகாத்திடும் வகையில், தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பினை அளித்திட வேண்டும்,

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்