நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி உணவு தயாரிப்பதால் மோசமான ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும் என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கம் நெல்லை வண்ணார்பேட்டையில் நடந்தது. உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் சசி தீபா தலைமை தாங்கினார். கலெக்டர் விஷ்ணு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசும்போது, நெல்லை மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி மெகா முகாம் நடக்கிறது. இதில் பூஸ்டர் தடுப்பூசி போட தகுதியானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம், என்றார்.