கொரோனா தடுப்பூசி முகாம்

ஆலங்காயம் வட்டாரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

Update: 2022-06-12 12:02 GMT

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆணைக்கிணங்க, மாவட்டம் முழுவதும், 30-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ஆலங்காயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற முகாம்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பூமாலினி மற்றும் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டி.ஆர்.செந்தில் மற்றும் ஒன்றியக்குழு தலைவர் சங்கீதா பாரி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்