கொரோனா தடுப்பு ஒத்திகை கூட்டம்
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் ெகாரோனா தடுப்பு ஒத்திகை கூட்டம் நடந்தது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 15 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் கொரோனா நோயாளிகள் 3 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு கொரோனா தடுப்பு ஒத்திகை கூட்டம், மருத்துவக் கல்லூரி முதல்வர் சுகந்தி ராஜகுமாரி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களுக்கான படுக்கை வசதிகளை துரிதமாக ஏற்படுத்துதல், கொரோனா பரிசோதனை, பிராணவாயு, மாத்திரைகள் கையிருப்பு போன்றவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் வீரமணி, டாக்டர்கள் கலந்து கொண்டனர்.