கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

தஞ்சை கோட்ட தபால் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.

Update: 2022-06-25 21:06 GMT

தஞ்சாவூர், 

தஞ்சை துணை சுகாதார அலுவலகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள், தஞ்சை கோட்ட தபால் அலுவலகத்துடன் இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தஞ்சை கோட்ட தபால் அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமை தஞ்சை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மானம்புசாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சாந்தி தடுப்பூசி செலுத்தினார். தஞ்சை கோட்ட தபால் அலுவலக உதவி கண்காணிப்பாளர் பிரேம் ஆனந்த், உமாபதி, மக்கள் தொடர்பு அதிகாரி நீலவண்ணன் யாதவ் உள்பட தஞ்சை கோட்ட தபால் அலுவலக ஊழியர்கள், நகர்ப்புற துணை தபால் ஊழியர்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகள், ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் உள்பட பலர் முகாமில் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்