தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா... மீண்டும் ஊரடங்கு வருமா..?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கிடு கிடுவென உயர்ந்து வருகிறது.

Update: 2022-06-30 16:03 GMT

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று ஒருநாள் பாதிப்பு 2,069- ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒருநாள் பாதிப்பு 771-ல் இருந்து 909- ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று முன் தினம் 1,4884 ஆக இருந்த கொரோனா பாதிப்பானது நேற்று 1,827 ஆக அதிகரித்தது. இந்த நிலையில், இன்று இரண்டாயிரத்தை கடந்துள்ளது. இதனால், மக்கள் மீண்டும் ஊரடங்கு வருமா என்ற அச்சத்தில் உள்ளனர்.

மருத்துவர்கள் கூறும்போது, தற்போதைய கொரோனாவிற்கும், முன்பு இருந்த கொரோனாவிற்கு உள்ள வித்தியாசம் என்னவென்றால், பழைய கொரோனா பாதிப்பின் போது மக்கள் அதிகம் உயிரிழந்தனர். தற்போது உள்ள கொரோனா பெரிதாக உயிரிழப்பை ஏற்படுத்தவில்லை. கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவருக்கும் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட சாதாரன பிரச்சனைகளே ஏற்படுகிறது. மருத்துவமனைகளில் கொரோனாவின் தீவிரத்தை தற்போது கான முடியவில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கொரோனாவால் ஊரடங்கு வருமா என்ற கேள்விக்கு மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகள் வரும் கூட்டத்தை வைத்தே கணிக்க முடியும் என்கிறார்கள். அதாவது மருத்துவமனையில் உள்ள வார்டுகள் கொரோனா பாதிப்பால் முழுவதும் நிரம்பியும், படுக்கை வசதிகள் கிடைக்காமல், மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அளவுக்கும் அதிகமாக இருக்கும் சூழலில் அது மிகப்பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும். அத்தகைய சூழலில், மக்கள் கூடுவதை தவிர்க்கவும், கொரோனா அதிகரிப்பதை தடுக்கவும், மீண்டும் ஊரடங்கு வருவதற்காக வாய்ப்புக்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும், கொரோனாவால், உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் சூழ்நிலையிலும், மீண்டும் ஊரடங்கு வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அது வரையில், மக்கள் ஊரடங்கை கண்டு அச்சப்பட தேவையில்லை. 

Tags:    

மேலும் செய்திகள்