ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 133 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 4 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இந்த நிலையில் நேற்று புதிதாக 4 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 727 ஆக உயர்ந்தது.
இதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 962 பேர் குணமடைந்தார்கள். நேற்று மட்டும் ஒருவர் குணமடைந்தார். தற்போது 31 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனாவுக்கு 734 பேர் பலியாகி உள்ளனர்.