தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2022-06-26 16:09 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா தொற்று முற்றிலும் தடுக்கப்பட்டது. இதனால் கொரோனா பரவல் இல்லாத மாவட்டமாகவும் மாறியது. கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மாணவர்கள் மொத்தம் 45 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் விடுதியில் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கல்லூரி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

30 பேர்

மேலும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று மேலும் 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்து உள்ளது.

தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் படுக்கைகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா பாதித்தவர்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தொடர்ந்து கொரோனா பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்