மேலும் 2 பேருக்கு கொரோனா
அரியலூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 2 பேர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையிலும், 4 பேர் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.