கடலூர் மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு கொரோனா

கடலூர் மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2023-04-11 18:45 GMT


கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 76 ஆயிரத்து 144 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 75 ஆயிரத்து 180 பேர் குணமடைந்துள்ள நிலையில், 896 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு வெளியானது. இதில் புதிதாக 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 76 ஆயிரத்து 156 ஆக உயர்ந்தது.

இதற்கிடையே நேற்று சிகிச்சை முடிந்து 6 பேர் வீடு திரும்பியுள்ளனர். தற்போது மாவட்டத்தில் 71 பேர் கொரோனாவுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்