தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு- மேலும் 369 பேருக்கு தொற்று

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

Update: 2023-04-09 15:20 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு இரட்டை இலக்க எண்ணிக்கையில் இருந்து வந்த நிலையில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதன்படி இன்று ஒரே நாளில் 369 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதில் ஆண்கள் 189 பேர், பெண்கள் 180 பேர் அடங்குவர். சிங்கப்பூரில் இருந்து வந்த 3 பயணிகளுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த பயணி ஒருவருக்கும், தாய்லாந்து நாட்டில் இருந்து வந்தபயணி ஒருவருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

சென்னையில் அதிகபட்சமாக 113 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 37 பேர் பாதிக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 172 பேர் குணம் அடைந்தனர். 1,900 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று தொற்று பாதிப்பு இல்லை. கொரோனாவால் இன்று உயிரிழப்பு நிகழவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்