கொரோனாவுக்கு முதியவர் சாவு; மேலும் 7 பேருக்கு தொற்று
கொரோனாவுக்கு முதியவர் சாவு; மேலும் 7 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் மெதுவாக அதிகரித்து வருகிறது. ஒரு ஆண்டுக்கு பிறகு கடந்த மாதம் 26-ந் தேதி 89 வயது முதியவர் கொரோனாவுக்கு பலியானார். இந்தநிலையில் 62 வயது முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். ஈரோட்டை சேர்ந்த அவர் காய்ச்சல், இருமல் தொந்தரவு காரணமாக கோவை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திாியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது தொற்று உறுதியானது. இதையடுத்து கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 29-ந் தேதி உயிரிழந்தார்.
இதேபோல் நேற்று புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 860 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 72 பேர் குணமடைந்தனர். நேற்று மட்டும் 8 பேர் மீண்டனர். தற்போது 52 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 736 பேர் பலியாகி உள்ளனர்.