மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா
மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியின் 5-வது தளத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 5 மாணவர்கள், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு மாணவர் என மொத்தம் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள், எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.