சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 3 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முககவசம் அணிந்து செல்லுமாறு சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.