கூட்டுறவு வங்கி பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம்

சங்கரன்கோவிலில் கூட்டுறவு வங்கி பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது

Update: 2022-07-25 16:02 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் நடராஜன், மாநில நிர்வாகிகள் சேகர், மாரிமுத்து, செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர். நெல்லை மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். மாநில பொதுச்செயலாளர் காமராஜ் பாண்டியன் சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில், கருணை ஓய்வூதியம் வழங்குவதில் உள்ள இடர்பாடு குறித்தும், நகை கடன் ஏலமிட்ட வகையில் ஏற்படும் குறைவு தொகையை நட்ட கணக்கில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைக் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் ஓய்வு பெற்ற பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முத்துப்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பணியாளர்கள், முன்னாள் ஊழியர்கள் பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் தென்காசி மாவட்ட செயலாளர் காளிதாசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்