பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்து: கனல் கண்ணனுக்கு ஆகஸ்ட் 26-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக கைதான சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணனுக்கு ஆகஸ்ட் 26-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;

Update:2022-08-15 16:42 IST

சென்னை,

சென்னையில் நடைபெற்ற இந்து முன்னணி கூட்டத்தில் திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், பெரியார் பற்றி அவதூறாக பேசி இருந்தார். இதையடுத்து கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கனல் கண்ணனை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர் தலைமறைவானார். சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு தள்ளுபடியானது.

இந்தநிலையில், புதுவையில் வைத்து கனல் கண்ணனை போலீசார் இன்று கைது செய்தனர். அவரை போலீசார் தற்போது எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில், இந்து முன்னணி நிர்வாகியும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணனை 26-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்