மதுரையில் 20-ந்தேதி அ.தி.மு.க. எழுச்சி மாநாடு:ஓசூரில் இருந்து வெற்றி ஜோதி தொடர் ஓட்டம்கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Update: 2023-08-15 19:45 GMT

ஓசூர்

மதுரையில், வருகிற 20-ந் தேதி அதி.மு.க. எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி, கிருஷ்ணகிரி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், வெற்றி ஜோதி தொடர் ஓட்டம் நடைபெறுகிறது. இதனை, ஓசூரில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை எம்.பி., முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி, கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர். இதில், தமிழ்செல்வம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், ஓசூர் மாநகர பகுதி செயலாளர்கள் அசோகா, வாசுதேவன், ராஜி, மஞ்சுநாத், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் நாராயணன் மற்றும் குபேரன், ஹேமகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த வெற்றி ஜோதி தொடர் ஓட்டமானது, மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் சென்றடைந்து வருகிற 20-ந்தேதி மதுரையில் நடைபெறவுள்ள மாநாட்டில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், ஜோதி ஒப்படைக்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்