தொடர் விடுமுறை... சென்னையிலிருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு
கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு போக்குவரத்துத்துறை முடிவுசெய்துள்ளது.
சென்னை,
நாளை, நாளை மறுநாள் மற்றும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி விடுமுறை என தொடர் விடுமுறை வருவதால், சென்னையில் பணியாற்றும் பிற ஊர்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
அவ்வாறு சென்னையில் இருந்து பிற ஊர்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு போக்குவரத்துத்துறை முடிவுசெய்துள்ளது.
மேலும், விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களுக்காக போதுமான பேருந்துகளை இயக்கவும் போக்குவரத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.