அரியலூரில் இன்று தற்செயல் விடுப்பு போராட்டம்-கிராம நிர்வாக அலுவலர் சங்கம் அறிவிப்பு

அரியலூரில் இன்று (வெள்ளிக்கிழமை) தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெறும் என கிராம நிர்வாக அலுவலர் சங்கம் அறிவித்து உள்ளது.

Update: 2022-09-29 20:08 GMT

அரியலூர் மாவட்டம் பனங்கூர் கிராமத்தில் சட்ட விரோதமாக செயல்பட்ட சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் இருந்து 11 டிப்பர் லாரிகளை ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன் மேலப்பழுவூர் அருகே பறிமுதல் செய்தார். இதனிடையே சரிவர விசாரிக்காமல் டிப்பர் லாரிகளை விடுவித்ததாக 2 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே அரியலூர் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் 120 கிராம நிர்வாக அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என மாநில தலைவர் அழகிரிசாமி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்