வாலிபர் கொலை வழக்கில் கைதானவர்களிடம் தொடர்பு - போலீஸ்காரர் பணியிடைநீக்கம்
வாலிபர் கொலை வழக்கில் கைதானவர்களிடம் தொடர்பு வைத்து தகவல் தெரிவித்ததாக போலீஸ்காரர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.;
திருக்கழுக்குன்றம் அடுத்த ருத்தரான்கோவில் பகுதியில் வசித்து வந்தவர் சர்புதீன் (வயது 37). இவர் கடந்த மாதம் 29-ந்தேதி திருக்கழுக்குன்றம் பகுதியில் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய 13 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொலை நடந்த மறுநாளே இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் அதிரடியாக காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் கொலை சம்பந்தமாக கைதானவர்களிடம் திருக்கழுக்குன்றம் கோர்ட்டு பணி போலீஸ்காரர் பிரசாந்த் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் போலீசாரின் ரகசிய தகவல்களை கைதானவர்களுக்கு தெரிவித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவின் பேரில் பிரசாந்த் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.