ஊட்டி
ஊட்டி அரசு உதவி பெறும் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுச்செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது, நுகர்வோர் சார்ந்த கல்வியை பெற்றுக் கொள்ள நுகர்வோர் மன்றங்கள் அவசியமாகிறது. அதனால் அனைத்து பள்ளிகளிலும் குடிமக்கள் மன்றங்கள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
நுகர்வோர்களாகிய நாம் தேவைகளை விட அதிகளவு பொருட்களை வாங்கி சேமிப்பதனால் பணம் விரையமாகிறது. பொருட்கள் தேவையானதாகவும், தரமானதாகவும் தேர்வு செய்து வாங்க வேண்டும். பொருட்கள் வாங்கும் போது தயாரிப்பு நிறுவனங்கள் பயன்படுத்தும் முறைகள் கேரண்டி, கார்டு வாரண்டி, உணவுப் பொருட்களானால் காலாவதி தேதியை விசாரித்து கேட்டு பொருட்கள் வாங்க வேண்டும். இதன்மூலம் தரமான பொருட்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உருவாகும் என்றார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.