எளிதாக வணிகம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம்

மயிலாடுதுறையில் எளிதாக வணிகம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-05-12 18:45 GMT


மயிலாடுதுறையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் எளிதாக வணிகம் செய்வது தொடர்பான ஒரு முனை தீர்வுக்குழு, இணைய தள பயன் தொடர்பான பயிற்சி பட்டறை கூட்டம் மற்றும் ஒற்றை சாளர இணைய முகப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கி பேசினார். இதில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்கள் மணிவண்ணன் (மயிலாடுதுறை), திரிபுரசுந்தரி (திருவாரூர்), ரமணி (நாகப்பட்டினம்), சகுந்தலா (தஞ்சாவூர்), முதுநிலை மேலாளர் கவுதம் தாஸ், தொழில் வழிகாட்டல் அலுவலர் மீனா, சபரீஸ், ஆயிஸ்புகாரி, முத்துக்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி, வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், தொழில் முனைவோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்