விவசாயிகளுக்கு ஆலோசனை கூட்டம்
சோளிங்கரில் விவசாயிகளுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது.
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் வட்டார விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வேளாண்மை துணை இயக்குனர் செல்வராஜ் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) பாலாஜி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் உழவன் செயலி பயன்படுத்தி தரிசு நிலத்தொகுப்பில் ஆழ்துளை குழாய் கிணறு அமைத்தல், வேளாண் எந்திரங்கள் பெறுதல், சொட்டுநீர் பாசனம், அறுவடைக்கு பின் மேலாண்மை திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் துறை சார்ந்த திட்ட உதவிகள் பெறுவது குறித்தும், நெல் அறுவடைக்கு பின்பு உளுந்து பயிர் செய்தல் குறித்தும், விவசாயிகளுக்கு எடுத்து கூறப்பட்டது.
இதில் உதவி வேளாண்மை அலுவலர்கள் வெங்கடேசன், விநாயகம், ஆத்மா திட்ட பணியாளர்கள் ராஜேஷ்குமார், ஜெயப்பிரகாஷ், தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.