ஒருங்கிணைந்த பண்ணையத்தில் 5 மாவட்ட அலுவலர்கள் கலந்தாய்வு

ஒருங்கிணைந்த பண்ணையத்தில் 5 மாவட்ட அலுவலர்கள் கலந்தாய்வு நடத்தினர்.

Update: 2023-06-27 19:16 GMT

மணிகண்டம் ஒன்றியம், நவலூர் குட்டப்பட்டில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் மகளிர் சுய உதவி குழுக்களால் பராமரிக்கப்படும் ஒருங்கிணைந்த பண்ணையம் உள்ளது. இந்த பண்ணையத்துக்கு நேற்று கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து மகளிர் திட்ட மாவட்ட வள பயிற்றுநர்கள் (பண்ணை) திருச்சி மாவட்ட திட்ட இயக்குனர் ரமேஷ்குமார் ஆலோசனையின் பேரில் உமா சுந்தரி (திருச்சி), மதனகோபால் (கரூர்), சுரேஷ் (தஞ்சாவூர்), கருப்பையா (புதுக்கோட்டை), சுதாகர் (விழுப்புரம்) ஆகியோர் வருகை தந்தனர்.

பின்னர் அவர்கள் பண்ணையத்தை பராமரித்து வரும் சுய உதவி குழு பெண்களுடன் கலந்துரையாடி உயர் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மணிகண்டம் ஒன்றிய குழு தலைவர் கமலம்கருப்பையா, ஊராட்சி மன்ற தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஒன்றிய கவுன்சிலர்கள் சுபாஷினி சண்முகம், டெல்பின் டேவிட் ராஜதுரை, துணைத் தலைவர் கலையரசன், ஊராட்சி செயலாளர் பாலச்சந்திரன், பண்ணைய பராமரிப்பாளர் அமல்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்