விவசாயிகளிடம் கருத்துகேட்பு கூட்டம்

கோமுகி அணை திறப்பது குறித்து விவசாயிகளிடம் கருத்துகேட்பு கூட்டம் நடந்தது.

Update: 2022-09-19 18:45 GMT

கச்சிராயப்பாளையம், 

கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இந்த அணையின் மூலம் சுமார் 11 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக அணை தனது முழு கொள்ளளவான 44 அடியை எட்டியது. இந்த நிலையில் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து பொதுப்பணித்துறை சார்பில் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் கோமுகி அணையில் நடந்தது. இதற்கு பொறியாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். இதில் புதிய பாசன வாய்க்கால் தலைவர் சேகர், பழைய பாசன வாய்க்கால் தலைவர் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் அக்டோபர் முதல் வாரத்தில் பாசனத்துக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை விரைவில் பெய்ய இருப்பதால், தண்ணீரை வீணாக்காமல் சேமிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் விவசாயிகள் திருநாராயணன், ஜப்பான்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்