'நீட்' தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்

திருப்பத்தூரில் நீட் தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது.

Update: 2023-05-05 18:28 GMT

திருப்பத்தூரில் நீட் தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

மருத்துவ படிப்பிற்கான 'நீட்' தேர்வு நாளை (ஞாயிற்றுகிழமை) பி்ற்பகல் 2 மணி முதல் 5.20 மணி வரை நடைபெறவுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி மருதர்கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் தேர்வு நடக்கிறது.

'நீட்' தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்தது.

அப்போது கலெக்டர் பேசியதாவது:-

சிறப்பு பஸ்கள்

வாணியம்பாடி, மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி மையத்தில் 816 பேர் தேர்வெழுத உள்ளனர். வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்தகள் தங்களுடைய தேர்வு மையத்திற்கு செல்ல ஏதுவாக மையம் அமைந்துள்ள வழித்தடத்தில் காலை 9 மணி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தேர்வு மையம் அருகே அனைத்து பஸ்களும் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மையத்தில் காலை 11 மணி முதல் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்வர்கள், தேர்வு ஏற்பாடுகள் தொடர்பாக வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் தேர்வு நாளன்று வாணியம்பாடி மருதர்கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி உதவி மைய அலைபேசி எண்கள் 8825887756, 9442825147 மற்றும் நீட் தேர்வு நகர ஒருங்கிணைப்பாளர் அலைபேசி எண் 9444414787 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், வருவாய் கோட்டாச்சியர் பிரேமலதா, தாசில்தார் சாந்தி, வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்